இரண்டு சிறுநீரகங்களும் செயலிழப்பு! இலங்கை தமிழர் போண்டா மணியின் மரணம் குறித்து வெளியான தகவல்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுநீரகங்கள் பாதிப்பு
நடிகர் போண்டா மணி சென்னையில் உள்ள குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரான போண்டா மணி பல மாதங்களாக உடல்நலக்கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்ததாக தெரிய வந்துள்ளது.
இலங்கையில் இருந்து வந்த கதை
1991ஆம் ஆண்டில் அறிமுகமானாலும், நடிகர் வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த பல நகைச்சுவைக் காட்சிகள் பெரிதளவில் பேசப்பட்டன.
சினிமா மட்டுமின்றி சில தொலைக்காட்சி தொடர்களிலும் போண்டா மணி நடித்துள்ளார். போண்டா மணி நேர்காணல் ஒன்றில், தனது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது என்று கூறினார்.
அத்துடன் இலங்கையில் இருந்து வந்த தனது கதையை இயக்குநர் பாக்யராஜிடம் கூறி, அதன் பின்னர் அவருக்கு பவுனு பவுனுதான் படத்தில் வாய்ப்பு கிடைத்ததையும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |