இலங்கைக்கு செல்வது போண்டா மணியின் விருப்பமாக இருந்தது! உருக்கத்துடன் பேசிய தமிழ் நடிகர்
நடிகர் போண்டா மணிக்கு இலங்கைக்கு செல்ல வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது என நகைச்சுவை நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு காலமானார்.
அவரது மறைவுக்கு உடன் இணைந்து நடித்த செந்தில், சிங்கமுத்து, சிசர் மனோகர், சாரப்பாம்பு சுப்புராஜ் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், போண்டா மணி குறித்து செய்தியாளர்களை சந்தித்த சாரப்பாம்பு சுப்புராஜ் கூறும்போது, 'போண்டா மணி எல்லோருக்கும் நல்லது செய்வார். நேற்று கூட காலையில் அவருடன் போனில் பேசினேன்.
என் பேச்சை கேட்பார். நான் நிறைய திட்டி இருக்கிறேன். பிறகு நானே போய் பேசினேன். போண்டா மணி குடும்பத்திற்கு வசதி இல்லை. திரையுலகினர் அனைவரும் சேர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
இலங்கைக்கு போக வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. தனது பிள்ளைகளை ஈழத்திற்கு கூட்டிச் சென்று காட்ட வேண்டும் என விரும்பினார். பாஸ்போர்ட் வரும்போது அவர் இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |