Instant Bonda: நாவூறும் சுவையில் மொறுமொறு போண்டா.., 5 நிமிடத்தில் செய்யலாம்
பண்டிகை காலங்களில் அனைவர் வீடுகளிலும் இடம் பெறும் முக்கியமான உணவு வடை, போண்டா.
அந்தவகையில், வெறும் 5 நிமிடத்தில் மொறுமொறு போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- ½ கப்
- கடலை மாவு- 1 கப்
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- ஓம விதைகள் - 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் - ½ ஸ்பூன்
- இஞ்சி - 1 துண்டு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், மற்றும் பெருங்காய தூள் சேர்த்து கிளறவும்.
இதற்கடுத்து அதில் ஓமம் விதைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.
பின்னர் இதில் 2 ஸ்பூன் எண்ணெயை கொதிக்கவைத்து சேர்த்து கரண்டியால் கிளறவும்.
அடுத்து இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு போல் பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்த மாவை போண்டா போல் சுட்டு எடுத்தால் சுவையான போண்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |