பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறித்தவருக்கு கௌரவம்
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன், போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பயங்கரவாத தாக்குதல்
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதல் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இது கடந்த 30 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் நடந்த பாரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.
இதனையடுத்து புதிய சட்டங்களின் கீழ், அடுத்த 2 வாரங்களுக்கு சிட்னியின் பெரும் பகுதிகளில் பொது ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அஞ்சலி
இந்த நிலையில், சிட்னி நகரில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் போட்டியில் போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

போட்டிக்கு முன்பாக நடந்த இந்த நிகழ்வில் முன்களப் பணியாளர்களுக்கு இரு அணிகளின் வீரர்களும் நன்றி தெரிவித்தனர்.
மேலும், பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து குண்டடிப்பட்ட அகமது அல் அகமது நேரில் கௌரவிக்கப்பட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |