எலும்பில் உருவாகும் புற்றுநோய்: இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்காதீர்கள்
புற்றுநோய் ஒரு கொடிய நோய் என்பது யாரும் அறிந்த விடயமே. ரத்தப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என பல வகையான புற்றுநோய்கள் உள்ளன.
ஆனால் உங்களுக்கு எலும்பு புற்றுநோய் குறித்து தெரியுமா? இந்த நாட்களில் அதன் பிரச்சினைகள் சற்று அதிகரித்த வண்ணத்திலேயே இருக்கிறது.
எலும்பு புற்றுநோய் என்பது எலும்புகளை பாதிக்கும் ஒரு தீவிர நோயாகும். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, திறம்பட சிகிச்சை அளிக்க முடியும்
இதற்கு முதலில் நீங்கள் அதன் அறிகுறிகளை கண்டறிவது மிக முக்கியமாகும். அந்தவகையில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எலும்பு புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்
எலும்பில் சில இடங்களில் தொடர்ந்து வலி ஏற்படும். எந்த ஒரு செயலைச் செய்தபின் அதிகரிக்கும் வலியும் இதன் பொதுவான அறிகுறியாகும். இந்த வலி லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம் மற்றும் இரவில் அடிக்கடி அதிகரிக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கம் ஏற்படும். சிறிய காயம் ஏற்பட்டால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
தொடர்ந்து சோர்வு உணர்வு, பசியின்மை, எடை இழப்பு, நீடித்த காய்ச்சல் போன்றவையும் இதன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிப்பதால் வாந்தி, மலச்சிக்கல் மற்றும் தசை பலவீனம் போன்றவையும் ஏற்படலாம்.
எலும்பு புற்றுநோய்க்கான காரணங்கள்
எலும்பு புற்றுநோய்க்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை, ஆனால் கதிர்வீச்சு போன்ற சில காரணிகள் ஆபத்தை அதிகரிக்கலாம்.
சில இரசாயனப் பொருட்களுடன் தொடர்பு கொள்வதாலும் எலும்பு புற்றுநோய் ஏற்படுகிறது.
அதே சமயம் சிலருக்கு எலும்பு புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மரபணு ரீதியாகவும் உள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இது தீவிரமாகினால் உங்களுக்கு, கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |