உங்கள் எலும்புகள் வலுவாக இருக்கணுமா? அப்போ இந்த 5 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க
நம் உடலில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையாமலும், வலுவாகவும் இருக்க இந்த 5 உணவுகளை சாப்பிட வேண்டாம். அது என்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
நமக்கு வலுவை கொடுப்பதே எலும்பு தான். மோசமான உணவுகளை சாப்பிடும்போது எலும்புகளில் உள்ள தாதுக்களை உறிஞ்சி பலவீனப்படுத்தி, எலும்புகளை வலுவிழக்க செய்கின்றன. மேலும், தேய்மானம் அடையும் எலும்புகளால் பல நோய்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
உப்பு
நீங்கள் உண்ணும் உணவில் உப்பு அதிகமாக சேர்க்கும் நபராக இருந்தால் முதலில் அதை நிறுத்துங்கள். ஏனென்றால், உப்பு அதிகமாக உண்டால் எலும்புகள் பலவீனமடையும்.
மேலும், உங்கள் உடம்பில் உள்ள எலும்பில் கால்சியத்தை உறிஞ்சி பலவீனப்படுத்தும்.
காபி
அதிகம் காபி குடிப்பவராக இருந்தாலும் அதனையும் குறைத்துக் கொள்ள வேண்டும். காபியில் உள்ள காஃபின் எலும்பில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி பலவீனப்படுத்தும்.
குளிர் பானங்கள்
சிலர் எதற்கெடுத்தாலும் குளிர்பானங்களை குடிப்பார்கள். அது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். சோடா மற்றும் குளிர் பானங்களில் அதிகளவில் காஃபின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.
காஃபின் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக எடுத்துக் கொள்வது எலும்புகளுக்கு ஆபத்தானது.
துரித உணவுகள்
தற்போதைய காலத்தில் வெளியில் சாப்பிடும் பழக்கம் அதிகளவில் வந்துள்ளது. வெளியில் விற்கும் துரித உணவுகளை சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
மேலும், உங்களது எலும்பை வலுவிழக்க செய்து பாதிப்பை ஏற்படுத்தும்.
இனிப்பு உணவுகள்
இனிப்பு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் அதில் உள்ள சோடியம் பாதிப்பை விளைவிக்கும். அந்த வகையான உணவில் உள்ள சோடியம், கால்சியத்தை உறிஞ்சி எலும்பை பலவீனப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |