நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்கமாட்டேன் - ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க எப்போதும் அனுமதிக்கமாட்டேன் என போனி கபூர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி
இந்திய அளவில் பிரபல நடிகையாக உச்சத்தில் இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் திரைப்படங்களை தயாரித்து வரும் நிலையில், மூத்த மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் மறைந்த ஸ்ரீதேவி குறித்த விடயங்களை போனி கபூர் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
வாழ்க்கை வரலாறு படம்
அவர் கூறுகையில், ''ஸ்ரீதேவி என்னை விட ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரால் தான் ஆன்மீகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். ஸ்ரீதேவி வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களை ஏற்கக்கூடியவர்.
அவரது தாயார் இறந்தபோது அவரது தாயாரின் சிதைக்கு ஸ்ரீதேவி தான் தீமூட்டினார். அவர் பெரும்பாலும் தனிப்பட்ட நபராக இருக்க விரும்புவார்.
அவர் வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என்று நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்கமாட்டேன்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |