இளவரசர் ஹரியை மோசமாக கேலி செய்ய புத்தகம் தயார்... அந்தரங்க விடயங்களும் கேலிக்குள்ளாகியுள்ள பரிதாபம்
வெளிநாடுகளில், ஒரு பிரபல திரைப்படம் வருமானால், அதை கேலி செய்து காமெடி திரைப்படம் ஒன்றையும் வெளியிடும் வழக்கம் உள்ளது.
உதாரணமாக, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஒன்று வெளியானால், அவரைப் போலவே, காமெடியனான மிஸ்டர் பீன் நடிக்கும் ஒரு திரைப்படமும் வெளியாகும்.
புத்தகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஹரியின் 'Spare' புத்தகத்தை கேலி செய்து ஒரு புத்தகம்
தற்போது, இளவரசர் ஹரி வெளியிட்ட 'Spare' புத்தகத்தை கேலி செய்யும் வகையில் ஒரு புத்தகம் தயாராகிவருகிறது. ஏப்ரல் 1, முட்டாள்கள் தினத்தன்று, அது வெளியாக உள்ளது.
'Spare' புத்தகத்தில் ஹரி அந்தரங்க விடயங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து எழுதியிருந்தார். சொல்லப்போனால், அவரது ஆணுறுப்பு குறித்த ஒரு செய்தியும், முதன்முறையாக தான் ஒரு பெண்ணிடம் கன்னித்தன்மையை இழந்ததைக் குறித்த செய்தியும் கூட இடம்பெற்றிருந்தன.
தற்போது 'Spare' புத்தகத்திற்கு போட்டியாக வெளியாகும் புத்தகம், ஹரி எழுதியுள்ள விடயங்களை மோசமாக கேலி செய்துள்ளது.
Spare Us! A Harrody
அந்த புத்தகத்துக்கு, ‘Spare Us! A Harrody’ என பெயரிடப்பட்டுள்ளது. அதன் அட்டைப்படத்தில், அதே ஹரி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், ஹரியின் வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது போல அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரைவசி, பிரைவசி என பேசும் ஹரி, தனது புத்தகத்தில், தனது அந்தரங்க விடயங்கள், தன் குடும்பத்தைக் குறித்த இரகசியங்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதியுள்ளார்.
Image: PA
இதுதான் பிரைவசியா, இது அவருடைய கதை என்கிறதாம் அந்த புத்தகம்.
Image: Beata Zawrzel/NurPhoto/REX/Shutterstock