மகாராணியின் ஆலோசனையை நிராகரித்த மேகன் மார்க்கல்? வெளியான தகவல்
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆலோசனையை திருமணத்திற்கு முன்பு மேகன் மார்க்கல் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணி எலிசபெத்தின் நன்மதிப்பை பெற்ற சோஃபி
சோஃபி ரைஸ்-ஜோன்ஸ் கடந்த 1999ஆம் ஆண்டில் இளவரசர் எட்வர்ட்டை திருமணம் செய்துகொண்டார். மேலும் அவரது அவதூறுகளை எதிர்கொண்டதன் மூலம் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகள் ஆனார்.
@MAX MUMBY/INDIGO/GETTY IMAGES
இந்த நிலையில் ராபர்ட் ஜான்சனின் புதிய புத்தகமான Our King: Charles III - The Man And The Monarch Revealedயின் இரண்டாவது பகுதியில், ராணி எலிசபெத் மற்றும் மேகன் மார்க்கல் குறித்த சில விடயங்கள் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நிராகரித்த மேகன்
அதாவது, ஹரி மற்றும் மேகனின் திருமணம் ஒரு நல்ல தொடக்கத்தில் இருக்கும் என்று ராணி உறுதியாக இருந்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு உதவிகளை வழங்கும் நபராக சோஃபி இருப்பார் என்று அவர் நம்பினார்.
எனவே, சோஃபியிடம் உதவிகளை பெறலாம் என்ற வாய்ப்பை மேகனுக்கு அளித்த ராணி, அவரிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளார். ஆனால், மேகனோ அதனை நிராகரிக்கும் வகையில் எனக்கு ஹரி கிடைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
மேகன் முன்பு டச்சஸ் என்ற உயர் பதவியில் இருந்ததால், அவருக்காக சோஃபி செய்ய வேண்டிய கடமை இருந்தது. ஆனால் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச தம்பதியர் கடமையில் இருந்து பின்வாங்கிய பிறகு, குடும்பத்தின் மற்றவர்களுடனான அவர்களின் உறவு சிதையத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.