2வது டோஸ் போட்டு எத்தனை நாட்டுகளுக்கு பிறகு பூஸ்டர் போடலாம்? பிரான்ஸ் உயர் சுகாதார ஆணையம் முக்கிய தகவல்
2வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் இடையிலான இடைவெளியைக் குறைக்க பிரான்சின் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
பிரான்சில் தற்போது 2வது டோஸ் போட்டு 5 மாதங்கள் ஆன பெரியவர்களுக்கு மட்டுமே பூஸ்டேர் டோஸ் போடப்பட்டு வருகிறது.
இந்த இடைவெளியை 4 மாதங்களாக பிரான்ஸ் அரசாங்கம் குறைக்கும் என டிசம்பர் 17ம் திகதி பிரதமர் Jean Castex அறிவித்தார்.
இந்நிலையில், தற்போதைய கவலையளிக்கும் தொற்றுநோய் சூழலில், 2வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் இடையே இருக்கும் கால அளவவை குறைப்பதன் மூலம் தடுப்பூசி பிரச்சாரத்தை விரைவுபடுத்துவது சரியானதாக இருக்கும் என உயர் சுகாதார ஆணையம் (HAS) தெரிவித்துள்ளது.
2வது டோஸ் போட்டு 3 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் போடப்பட வேண்டும் என்று HAS இப்போது பரிந்துரைத்திருக்கிறது.
ஏற்கனவே வேறு நோய் பாதிப்பு இருக்கும் 12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்பட வேண்டும் என்றும் HAS பரிந்துரைத்திருக்கிறது.
HAS பரிந்துரையை ஏற்றுக்கொள்வது குறித்து பிரான்ஸ் அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை.