ஒமிக்ரானுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி செயல்படுமா? பிரித்தானியா ஆய்வில் தகவல்
Omicron தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி செயல்படுவது குறித்து இங்கிலாந்து ஆய்வில் சில உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றின் புதியவகை மாறுபாடான Omicron வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் முதலில் தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என சுமார் 57க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
இது கொரோனாவில் இருந்து உருமாறியது என்பது இதற்கு 'Omicron' என்று உலகசுகாதாரத்துறை பெயர் சூட்டியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் Omicron பரவல் அதிகமாக இருப்பதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக நாடுகள் ஆலோசனை செய்து வருகின்றனர். பைசர் நிறுவனம் 3வது டோஸ் செலுத்துவது மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து Omicron வைரசுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி செயல் திறன் மிக்கதாக இருக்கும் என்று இங்கிலாந்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறியதாவது, கொரோனா தடுப்பு மருந்தின் 3வது டோஸ் ஒமிக்ரானுக்கு எதிராக 70 முதல் 75 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கிறது.
3வது டோஸ் மூலம் 581 ஒமிக்ரான் பாதிப்புகளின் தரவுகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் புதிய மாறுபாட்டுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.