யார் யாருக்கு பூஸ்டர் தடுப்பூசி? சூரிச் நிர்வாகம் விளக்கம்
சூரிச் மாநிலத்தில் தேவையானோர் யார் வேண்டுமானாலும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற தகவல் பரவி வந்த நிலையில், தற்போது மாநில நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சூரிச் மாநிலத்தில் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பரவி வந்த கட்டுக்கதைகள் மொத்தமும் தவறானது என சுட்டிக்காட்டியுள்ள நிர்வாகம், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதங்களில், சுகாதாரத்துறை நிர்வாகிகளால் அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சூரிச் மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், 65 வயதுக்கு உட்பட்ட பலபேர் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளதும் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.