இலந்தைப் பழம் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு பாருங்க.. உடலில் இந்த மாற்றங்கள் நடக்கும்!

Constipation sleep disorders blood pressure
By Kishanthini Feb 11, 2022 01:00 PM GMT
Report

ஆரோக்கியம் நிறைந்த பழ வரிசையில் இலந்தைப்பழமும் ஒன்றாகும். இலந்தைப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

குறிப்பாக வைட்டமின் ஏ வைட்டமின் சி கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு டயட்டிரி ஃபைபர் என்னும் நார்ச்சத்து நிறைந்த பழம் இது. இதில் கிட்டதட்ட 18 அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.

தற்போது இந்தபழத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

இலந்தைப் பழம் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு பாருங்க.. உடலில் இந்த மாற்றங்கள் நடக்கும்! | Boosting And Other Health Benefits Of Jujube Fruit

  • இலந்தைப் பழத்தில் இருக்கும் சப்போனின் இயற்கையாகவே தூக்கத்தைத் தூண்டி, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் மனம் அமைதி பெறுவதோடு நரம்பு மண்டலமும் அமைதியாக இருக்கும். 

  •  மலச்சிக்கல் பிரச்சினைக்கு இலந்தைப்பழம் தீர்வாக இருக்கும். கிடைக்கும் நேரங்களில் ஒரு கைப்பிடி அளவுக்கு இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சினைகளைச் சரிசெய்து ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

  • இலந்தைப் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. ஃப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுகிறது.

  •    இலந்தைப் பழத்தில் உப்பின் அளவு மிகக் குறைவு. குறைந்த சோடியமும் அதிக அளவு பொட்டாசியமும் நிறைந்திருக்கின்றன. பொட்டாசியம் ரத்தக் குழாய்களின் இறுக்கங்களைத் தளர்த்தி, இலகுவாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் ரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

  •    இலந்தைப் பழத்திலுள்ள அதிக அளவிலான பாஸ்பரஸ் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வதோடு, ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்க இலந்தைப் பழம உதவி செய்கிறது. 

  •  இலந்தைப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகள் உறுதியடையும். ஆஸ்ட்டிரியாபொராசிஸ் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்கள் அடிக்கடி இலந்தைப் பழம் சாப்பிட்டு வந்தால் பிரச்சினை கட்டுக்குள் வரும்.

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US