கத்தார் உலகக் கோப்பை... ஒற்றை காரணத்தால் இரண்டாக பிரிந்த இங்கிலாந்து எல்லையோர கிராமம்
பிரித்தானிய எல்லையோர கிராமத்தில் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களை ஒரு வீதியே இரண்டாக பிரித்துள்ளது.
இரண்டாக பிரிந்துள்ள ரசிகர்கள்
குறித்த Llanymynech கிராமத்தின் ஒருபகுதி இங்கிலாந்தும் மறு பக்கம் வேல்ஸ் நாடு என்பதால் கால்பந்து ரசிகர்களும் தற்போது இரண்டாக பிரிந்துள்ளனர். மட்டுமின்றி வீதியின் இருபக்கமும், இரு அணிகளின் ரசிகர்களும் தங்கள் அபிமான கொடிகளை தோரணமாக தொங்கவிட்டுள்ளனர்.
Credit: fpnw.co.uk©2022
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய ஆட்டத்தின் தோல்வியும் வெற்றியும் தங்கள் கெளரவ பிரச்சனையாகவே இரு நாடுகளின் கால்பந்து ரசிகர்களும் கருதுகின்றனர்.
இதன் உச்சமாக, 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடித்துக்கொண்டு ஒன்றாக வாழ்ந்துவரும் தம்பதி ஒன்று, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆட்டத்தை தனித்தனியாக காண முடிவு செய்துள்ளார்களாம்.
@getty
வேல்ஸ் அணி இன்று சாதிக்கும்
இங்கிலாந்தில் பிறந்த 65 வயது ஜீன் கூறுகையில், இந்தமுறையும் இங்கிலாந்து அணியே வெல்லும், 3-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை சிதறடிப்போம் என்கிறார். ஆனால், வேல்ஸ் நாட்டவரான அவரது கணவர் கூறுகையில், தமது மனைவியின் கனவு இந்தமுறை கண்டிப்பாக பலிக்காது, வேல்ஸ் அணி இன்று சாதிக்கும் என்கிறார்.
Picture: Andrew Price
இதனிடையே வேல்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே தயாராகிவிட்டனர். வேல்ஸ் நாட்டவரான விவசாயி ஒருவர் தெரிவிக்கையில், 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி ஸ்தம்பிக்க போகிறது, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
ஆனால், இந்த போட்டி எல்லாமே நட்புரீதியானது மட்டுமே என்கிறார் இங்கிலாந்து ரசிகர் ஒருவர்.
வேல்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா சாவா என மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.