புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம்
புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் சட்டவிரோதமாக புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான ஒரு விசாரணையில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட பலர் சாட்சியமளிக்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Manston ஊழல்
இங்கிலாந்திலுள்ள Manston என்னுமிடத்தில் 1,600 பேர் மட்டுமே தங்கும் வசதி கொண்ட ஒரு கட்டிடத்தில், சட்டவிரோதமாக 4,000 புலம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட்டார்கள்.
அங்கு நிலவிய மோசமான சூழ்நிலை காரணமாக, டிப்தீரியா மற்றும் ஸ்கேபிஸ் ஆகிய தொற்றுக்கள் பரவின.
ஈராக் நாட்டவரான ஹுசைன் ஹசீப் அஹமது (31) என்ற புகலிடக்கோரிக்கையாளர் டிப்தீரியா தொற்றுக்கு பலியானார்.
இந்த விடயம் Manston ஊழல் என அழைக்கப்படுகிறது.
பல தடைகளுக்குப் பிறகு தற்போது அந்த ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
வழக்கில், முன்னாள் பிரித்தானிய பிரதமர்களான ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், முன்னாள் உள்துறைச் செயலர்களான பிரீத்தி பட்டேல், கிரான்ட் ஷாப்ஸ் மற்றும் சுவெல்லா பிரேவர்மேன், முன்னாள் பாதுகாப்புச் செயலரான பென் வாலேஸ் முதலானவர்களும், பல அமைச்சர்களும் விசாரணைக்குட்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |