போரிஸ் ஜான்சனின் குடும்பத்தில் யார் கொரோனாவால் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்? கசிந்த தகவல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் குடும்ப உறுப்பினருடைய விவரம் தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் ஜான்சன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவகம் அறிவத்தது.எனினும் யார் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்பதை குறிப்பிடவில்லை.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த வியாழன் அன்று லங்காஷயர் பயணத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார், பின் செவ்வாயன்று தான் பொதுவெளியில் தோன்றினார்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் மகள் ரோமி கொரோனா நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, போரிஸ் மற்றும் கேரி ஜான்சனின் ஆறு வார மகள் ரோமி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள், ஆனால் இப்போது சரியாகிவிட்டாள் என நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.