பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உண்மையில் எத்தனை குழந்தைகள்? அவரே சொன்ன ஆச்சரியமூட்டும் பதில்!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பல வருட ஊகங்களுக்குப் பிறகு இறுதியாக அவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பதை உறுதிசெய்தார்.
அமேரிக்கா சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இன்று நியூ யார்க்கில் NBC News-ன் டுடே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தந்தையாக இருப்பது குறித்து கிட்டத்தட்ட 5 கேள்விகள் கேட்கப்பட்டன.
அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், சவன்னா குத்ரி (Savannah Guthrie), "நீங்கள் பிரதமரான பிறகு, நீங்கள் மீண்டும் தந்தையாகிவிட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் "ஆம்" என்றார்.
"இப்போது உங்களுக்கு ஒரு புதிய குழந்தை உள்ளது. நீங்கள் இன்னொரு குழந்தையை எதிர்பார்க்கிறீர்களா? " என்று கேட்டதற்கு "எனக்கு தெரியும், எனக்கு தெரியும்" போரிஸ் ஜான்சன் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, "உங்களுக்கு 6 குழந்தைகள் இருக்கிறதா?" என கேட்கப்பட்டது. அதற்கு அவரது குடும்பத்தைப் பற்றி பேச தயங்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் "ஆம்" என்று பதிலளித்தார்.
அதன்பிறகும் விடாமல் அதைச்சுற்றியே கேள்வி எழுப்பிய தொகுப்பாளர் ""சிறிய குழந்தைகளை வைத்திருப்பது எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். அதற்கு உற்சாகமாக பதிலளித்த போரிஸ் ஜான்சன், "இது அற்புதமான ஒன்று. எஸ், உங்களுக்குத் தெரியும், இது நிறைய வேலை. இது நிறைய வேலை, நான் உங்களுக்கு நிறைய சொல்கிறேன். ஆனால் நான் அதை விரும்புகிறேன். நான் அதை முற்றிலும் விரும்புகிறேன். நான் நிறைய நாப்கின்களை மாற்றுகிறேன்." என்றார்.
அதற்கு ஆச்சரியமாக "நீங்களா.. உண்மையாகவா?" என அப்பெண் கேட்க, "நான் செய்கிறேன். நான் செய்வேன்" என பிரதமர் தெளிவாக கூறினார்.
“My admiration for American democracy is undimmed.”
— TODAY (@TODAYshow) September 21, 2021
Watch @SavannahGuthrie’s full interview with British Prime Minister Boris Johnson ahead of the U.N. General Assembly on Afghanistan, the COVID-19 pandemic, the Jan. 6 Capitol riot and more. pic.twitter.com/mu5YKjDgJz
2019 தேர்தலுக்கு முன்பு அவருக்கு எத்தனை குழந்தைகள் இருந்தன என்று நேரடியாகக் கேட்டபோது, பிரதமர் எல்.பி.சியிடம் கூறினார்: "நான் என் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன், ஆனால் அவர்கள் இந்தத் தேர்தலில் நிற்கவில்லை, எனவே நான் அவர்களைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போவதில்லை." என்று கூறினார்.
ஆனால், இன்று தனது சொந்த வாழ்க்கை குறித்து வெளிப்படையாக சில விடயங்களை பதிலளித்துள்ளார்.
கடந்த ஆண்டு தனது மூன்றாவது மனைவியான கேரியுடன், பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது, கேரி ஜான்சன் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இன்னும் பிறக்காத அந்த குழந்தையுடன் போரிஸ் ஜான்சனுக்கு மொத்தம் 7 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.