இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்! பிரதமர் போரிஸ் ஜான்சன் காட்டம்
இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் குறித்த இனவெறி தொடர்பான கருத்துக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- இத்தாலி அணிகள் மோதின.
பரபரப்பான இப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறைப்படி இத்தாலி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மார்கஸ் ராஷ்போர்ட், ஜடோன் சாஞ்சோ, புக்காயோ சாகா ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி ஷூட் அவுட்டின்போது கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இதனையடுத்து இவர்களை விமர்சிக்கும் விதமாக சமூகவலைத்தளங்களில் இனவெறி கருத்துக்கள் பதிவிடப்பட்டன.
இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், வீரர்கள் கதாநாயகர்களாகக் கொண்டாடப்பட வேண்டுமே தவிர சமூகவலைதளங்களில் இனவெறி கருத்துகளை பதிவிடக்கூடாது, அதற்காக அவர்கள் வெட்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
This England team deserve to be lauded as heroes, not racially abused on social media.
— Boris Johnson (@BorisJohnson) July 12, 2021
Those responsible for this appalling abuse should be ashamed of themselves.