7-வது முறையாக தந்தையான பிரித்தானிய பிரதமர்!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: "இன்று முன்னதாக லண்டன் மருத்துவமனையில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்ததை அறிவிப்பதில் பிரதமரும் திருமதி ஜான்சனும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அம்மா, மகள் இருவரும் நன்றாக இருக்கிறார்கள். NHS குழுவின் கவனிப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி" என தெரிவித்தார்.
பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்த குழந்தையுடன் சேர்த்து குரைந்தது 7 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய மனைவி கேரியுடன் இரண்டு குழந்தைகள், இரண்டாவது மனைவி மரீனாவுடன் 4 குழந்தைகள் மற்றும் மற்றோரு பெண்ணுடன் குறைந்ததது ஒரு குழந்தை இருக்கலாம் என கூறப்படுகிறது.