சிக்கலில் சிக்கிக் கொண்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்
கடந்த 2019ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சர்ச்சைக்குரிய Mustique பகுதிக்கு சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
அதாவது, கிறிஸ்துமஸ் கொண்டாட போரிஸ் ஜான்சன் செய்த செலவு கணக்கு குறித்து தற்போது பிரிட்டன் பார்லிமெண்டில் விவாதம் எழுந்துள்ளது.
இந்த கொண்டாட்டத்திற்காக அவர் செய்த செலவு குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கமிட்டி கோரியுள்ளது.
தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த Mustique தீவில் அப்போதைய காதலி மற்றும் தற்போதைய மனைவி கேரி சைமண்ட்ஸ் உடன் போரிஸ் ஜான்சன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தனியார் கொண்டாட்டத்திற்கு போரிஸ் ஜான்சன் எவ்வாறு பணம் செலுத்தினார் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தப் பிரச்னை பூதாகரமாக உருவெடுக்க முக்கியக் காரணம் போரிஸ் ஜான்சன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இட்ட உத்தரவுதான்.
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் யாரும் தனிப்பட்ட செலவுக்காக கட்சியின் நிதியைப் பயன்படுத்தக் கூடாது.
குறிப்பாக ஆடம்பர செலவுகளுக்கு பயன்படுத்துவது தவறு என்று உத்தரவிட்டு அதனைச் சட்டமாக்கி இருந்தார்.
இந்த சட்டத்தை தற்போது பிரதமரே மீறியிருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.