புடின் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்... போரிஸ் ஜான்சன் பகீர் குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை ஏவுகணை மூலம் கொன்று விடுவதாக மிரட்டினார் என்று பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
புடின் கொலை மிரட்டல்
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு முன்னதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நிர்வாகத்தின் முக்கிய ஆதரவாளர் என்பதை உலகிற்கு சுட்டிக்காட்டி இருந்தார்.
மேலும் போருக்கு மத்தியிலும் உக்ரைனுக்கு இரண்டு முறை விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன்னுடைய ஆதரவை உக்ரைனுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
?? BBC: Boris Johnson has said Vladimir Putin threatened him with a missile strike in an "extraordinary" phone call in the run-up to Russia's invasion of Ukraine. #UkraineRussianWar #NAFO #UnitedKingdom #PutinWarCriminal pic.twitter.com/ywpF0HPqWI
— Ukraine War Now ✙ (@uarealitynow) January 30, 2023
இந்நிலையில் போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடம் மேற்கு நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை காட்டும் பிபிசியின் புதிய தொடருக்காக பேசியுள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி புடினுடனான அழைப்பை பற்றி பேசியுள்ள ஜான்சன், அவர் ஒரு கட்டத்தில், 'போரிஸ், நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஒரு ஏவுகணை மூலம், அது ஒரு நிமிடம் எடுக்கும்' அல்லது அது போன்ற ஏதாவது என கூறி மிரட்டினார் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விரைவில் வெற்றியடைய வேண்டும்
உக்ரைன் போர் தொடர்பாக போரிஸ் ஜான்சன் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், உக்ரைன் மக்களின் துன்பம் நீண்ட காலமாக உள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, உக்ரைன் வெற்றி பெறுவது மற்றும் முடிந்தவரை விரைவாக வெற்றி பெறுவது என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் இந்த வேலையை முடிக்க தேவையான அனைத்து கருவிகளையும் இரட்டிப்பாக்கி வழங்க வேண்டிய தருணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் சேலஞ்சர் 2 டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவது மற்றும் உக்ரைனுக்கான பிரித்தானியாவின் அரசாங்க கொள்ளை இரண்டையும் முழுமையாக ஆதரிப்பதாக ஜான்சனின் செய்தி தொடர்பாளர் வெளிப்படுத்தியுள்ளார்.