உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயிலுக்கு அருகே ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலில் போரிஸ் ஜான்சன்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு அவர் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்.
உக்ரைனில் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயிலுக்கு சற்று பின்னால் வந்த ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
உக்ரைனிய தலைநகர் கீவ்வில் இருந்து போலந்து நோக்கி போரிஸ் ஜான்சன் இரவில் ரயில் பயணம் செய்து கொண்டிருந்த போது எல்லைப் பகுதியில் இந்த வான்வழித் தாக்குதலானது நடத்தப்பட்டு இருப்பதாக ஜேர்மன் நாளிதழான டெர் ஸ்பீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது போரிஸ் ஜான்சனுடன் முன்னாஸ் ஸ்வீடன் பிரதமர் கார்ல் பில்ட், ஜேர்மன் சான்சலரின் பிரீட்ரிக் மெர்ஸின் நெருங்கிய ஆலோசகர் குண்டர் செளட்டர் மற்றும் பல ஐரோப்பிய தூதர்களும் உடனிருந்துள்ளனர்.
ஜான்சன் பயணித்த ரயில் எல்லைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் ட்ரோன்களின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டு ரயிலானது உடனடியாக நிறுத்தப்பட்டது.
இருப்பினும் அதன் பின்னால் வந்த ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |