போரிஸ் ஜான்சன் ஒரு கோமாளி... மோசமாக விமர்சித்த மற்றொரு நாட்டின் தலைவர்

United Kingdom Boris johnson
By Balamanuvelan Dec 02, 2021 11:13 AM GMT
Report

போரிஸ் ஜான்சன் ஒரு கோமாளி, ஒன்றுக்கும் உதவாதவர் என கடுமையாக விமர்சித்துள்ளார் மற்றொரு நாட்டின் தலைவர்.

அவர் வேறு யாருமல்ல, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்தான்...

சமீபத்தில், சிறு படகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்து அதில் பயணித்த 27 புலம்பெயர்வோர் உயிரிழந்த நேரத்தில், மேக்ரான் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை தொலைபேசியில் அழைத்து அது தொடர்பாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால், அப்போதே போரிஸ் மேக்ரானுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தை ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில், இரு நாடுகளின் பொலிசாரும் இணைந்து ரோந்து செல்லுதல், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் கால் வைப்பவர்களை உடனடியாக மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் ஒரு ஒப்பந்தம் செய்தல் முதலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

போரிஸ் ஜான்சன் ஒரு கோமாளி... மோசமாக விமர்சித்த மற்றொரு நாட்டின் தலைவர் | Boris Johnson Is A Clown

ஆனால், அந்த கடிதம் குறித்து மேக்ரான் அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு கடிதத்தை போரிஸ் வெளியிட்டது தெரியாமலே அவர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்படி மேக்ரான் தொலைபேசியில் போரிஸ் ஜான்சனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது உதவியாளர்கள், இப்படி ஒரு கடிதத்தை போரிஸ் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் விடயத்தை அவரிடம் கூறியிருக்கிறார்கள்.

ஆத்திரமடைந்த மேக்ரான், அப்போதுதான் தன் உதவியாளர்களிடம் இப்படி போரிஸ் ஜான்சனைக் குறித்து விமர்சித்திருக்கிறார்.

போரிஸ் ஜான்சன் ஒரு கோமாளி... மோசமாக விமர்சித்த மற்றொரு நாட்டின் தலைவர் | Boris Johnson Is A Clown

என்னிடம் அவர் நன்றாக பேசுகிறார், மிகவும் பணிவாக பேசுகிறார், வளர்ந்தவர்களைப்போல இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால், அப்படி பேசுவதற்கு முன்போ அல்லது பேசியதற்குப் பின்போ, இப்படி ஏதாவது செய்துவிடுகிறார். இதே கோமாளித்தனம் தொடர்கிறது என பொறிந்து தள்ளியிருக்கிறார் மேக்ரான்.

பிரித்தானியா சிறந்த ஒரு நாடு, ஆனால், அதன் தலைவர் ஒரு கோமாளியாக இருக்கிறார் என, பிரெக்சிட் தொடங்கி சமீபத்தைய போரிஸ் ஜான்சனின் ட்விட்டர் கடிதம் வரை வரிசையாக வைத்து வார்த்தைகளால் கடுமையாக சாடியிருக்கிறார் மேக்ரான்.  

போரிஸ் ஜான்சன் ஒரு கோமாளி... மோசமாக விமர்சித்த மற்றொரு நாட்டின் தலைவர் | Boris Johnson Is A Clown

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US