உக்ரைனுக்குள் காலடி எடுத்து வைத்தால்... ரஷ்யாவுக்கு போரிஸ் ஜான்சன் கடும் எச்சரிக்கை
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவினால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் பாயும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் Kiev சென்றுள்ள போரிஸ் ஜான்சன், அந்நாட்டு அதிபரான Volodymyr Zelenskyயுடன் கூட்டாக ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசும்போது அவ்வாறு தெரிவித்தார்.
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் காலடி எடுத்து வைத்த அடுத்த கணம், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் பாயும் என்றார் அவர்.
உக்ரைன் எல்லையில் 100,000க்கும் அதிகமான ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்ற வருந்தத்தக்க உண்மையை உலகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கூறிய போரிஸ், உக்ரைனுக்குள் ரஷ்ய இராணுவம் ஊடுருவினால், அது ஒரு அரசியல், மனிதநேய மற்றும் இராணுவப் பேரழிவாக இருக்கும் என்றார்.