போரிஸ் ஜான்சன் வலுக்கட்டாயமாக பிரதமர் பதவியைப் பிடிக்க முயற்சிக்கலாம்... முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை
பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
ஆனால், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக முயற்சிக்கலாம் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது.
போரிஸ் ஜான்சன் வலுக்கட்டாயமாக பிரதமர் பதவியைப் பிடிக்க முயற்சிக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகிய போரிஸ் ஜான்சன், மீண்டும் வலுக்கட்டாயமாக பிரதமர் பதவியைப் பிடிக்க முயற்சிக்கலாம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் விமர்சகரும், முன்னாள் அமைச்சருமான Rory Stewart தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ட்ரம்பும், இத்தாலியில் Silvio Berlusconi என்பவரும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயன்று வருவதுபோல், போரிஸ் ஜான்சனும் செய்யக்கூடும் என எச்சரித்துள்ளார் Rory Stewart.
Credit: AP