'இனியும் உயிர்கள் போகக்கூடாது' புதிய திட்டத்தை வெளியிட்ட பிரித்தானிய பிரதமர்
ஆங்கில கால்வாயை கடக்கும் முயற்சியில் பல உயிர்கள் பறிபோவதை நிறுத்த, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய ஐந்து-அம்ச திட்டத்தை பிரெஞ்சு பிரதமர் இமானுவேல் மக்ரோனுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை 25,000-க்கும் அதிகமானோர் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானிய கடற்கரைகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
புதன்கிழமையன்று அவர்களைப் பின்பற்ற முயன்ற 27 பேர் கடலில் மூழ்க்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் 17 ஆண்கள், 7 பெண்கள், மேலும் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் பதின்ம வயதினராக இருக்கலாம் என இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பிரெஞ்சு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம பெரும் சோகத்தை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து, ஆங்கில காலவாயில் இதுபோன்ற பேரழிவுகளை தவிர்ப்பதற்காக, பிரான்ஸ் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படக்கூடிய 5-அம்ச திட்டத்தை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளிப்படுத்தியுள்ளார்.
1. பிரித்தானியாவின் எல்லைப் படை அதிகாரிகள், பிரெஞ்சு கடற்கரைகள் மற்றும் அருகிலுள்ள சாலைகளில் ரோந்து செல்ல உதவுவார்கள். இறையாண்மை பற்றிய கவலைகள் காரணமாக பிரான்ஸ் இதை நிராகரித்தால், பிரித்தானிய அரசு இதற்காக ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு நிதியளிக்கும்.
2. கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை நேரடியாக பிரான்சுக்கு திருப்பி அனுப்ப பிரித்தானியாவுக்கு அதிகாரம் வேண்டும்.
Photo: Reuters
3. பிரித்தானிய ரோந்துப் படகுகளின் கப்பற்படைகள் (UK Border Force cutters) பிரெஞ்சு கடலோர நீரில் ரோந்து செல்ல உதவும். கூட்டுப் பணிகளில் இங்கிலாந்து கடல் எல்லைக்குள் பிரெஞ்சு கடற்படை நுழைய அனுமதிக்கப்படும்.
4. தொலைதூர கடற்கரைகளில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிய உதவும் வகையில், வடக்கு பிரான்சில் தரை உணரிகள் (ground sensors) மற்றும் ரேடார்களைப் பயன்படுத்துவதற்கு பிரித்தானியா நிதியளிக்கும். கடத்தல் கும்பல்களின் செயல்பாடுகள் பற்றிய உளவுத் தகவல்களைப் பகிர்வதை 'ஆழமாக்க' பிரதமர் போரிஸ் முன்வந்துள்ளார்.
5. பிரெஞ்சுப் படைகள் கடத்தல் நடவடிக்கைகளை விரைவாக இடைமறிக்க உதவும் வகையில், பிரித்தானியக் கண்காணிப்பு விமானங்களில் இருந்து உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வந்துள்ளார்.
Photo: EPA
Photo: AFP
