என் திட்டத்தையே போரிஸ் ஜான்சன் பாழாக்கிவிட்டார்: ஆத்திரத்தில் தாம் தூம் என குதிக்கும் மேக்ரான்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென உக்ரைனுக்குச் சென்ற விடயம் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் எரிச்சலை உருவாக்கியுள்ளது.
அதனால் தன் ஆலோசகர்களிடம் கோபத்தில் சத்தம் போட்ட மேக்ரான், இந்த உக்ரைன் பிரச்சினை துவங்கியதிலிருந்து போரிஸ் எதையுமே செய்யவில்லை. ஆனால், தான் ஏதோ பெரியதாக செய்தது போல அவர் தன்னைக் காட்டிக்கொள்வதைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது என்றாராம் மேக்ரான்.
விடயம் என்னவென்றால், பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுவருகிறது. நாளை இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்நிலையில், இரகசியமாக உக்ரைனுக்குச் செல்ல மேக்ரான் திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.
தான் தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் என்பதைக் காட்டிக்கொள்ளவும், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் வகையிலும் மேக்ரான் உக்ரைன் தலைநகர் Kyivக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென போரிஸ் சர்ப்ரைசாக Kyivக்குச் செல்ல, தான் போட்ட திட்டம் பாழாகிவிட்டதால் கடுப்பாகிவிட்டார் மேக்ரான்.
ஆனால், போருக்கு மத்தியிலும் தைரியமாக Kyivக்குச் சென்ற போரிஸ் ஜான்சனுக்கோ பாராட்டுகள் குவிகின்றனவாம்!