ராஜினாமா செய்ய எனக்கு விருப்பமில்லை... தேர்தலில் போட்டியிட போரிஸ் ஜான்சன் விருப்பம்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன், முன்னாள் கருவூல அதிகாரியான Peter Cruddas என்பவரிடம், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தனக்கு விருப்பமில்லை என்றும், தான் வெளியேறியதை மாற்ற தன்னால் முடிந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியதாக தி டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விரும்புவதாகவும் போரிஸ் ஜான்சன் Cruddasஇடம் கூறினாராம்.
போரிஸ் ஜான்சன் தன் முடிவில் உறுதியாக உள்ளார், அவர் நிச்சயம் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை என்று கூறியுள்ள Cruddas. போரிஸ் பிரதமராக நீடிக்க விரும்புவதுடன், அதற்கான ஆதரவும் அவருக்கு உள்ளதால், தன்னால் பிரதமராக நீடிக்கமுடியும் என அவர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளதாக டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.