நெதர்லாந்து மீது படையெடுக்க ரகசியம் திட்டம் தீட்டிய பிரித்தானிய பிரதமர்... ஒரே ஒரு காரணம்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன், கோவிட் தடுப்பூசிகளை கைப்பற்றும் நோக்கில் நெதர்லாந்து மீது படையெடுக்க ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக மோசமான திட்டம்
குறித்த தகவலை போரிஸ் ஜோன்ஸனே தமது நினைவுக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அதில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பல மாதங்கள் நடந்த பேச்சுவார்த்தைகள், அதன் காரணமாக விடுவிக்கப்பட்ட 5 மில்லியன் தடுப்பூசிகள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவின் சிறப்புப் படைகள் சூழ்நிலைக்கேற்றவாறு விவகாரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான அவசர திட்டங்களையும் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் உருவாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னெடுப்பான கோவிட் தடுப்பூசியானது பெல்ஜியம் அதிகார வர்க்கத்தால் மூர்க்கத்தனமாக கைவசப்படுத்தப்பட்டது. ஆனால் நெதர்லாந்தில் இருந்து தடுப்பூசிகளை மீட்கும் திட்டத்தை உருவாக்கியுள்ள ஜோன்ஸன் தரப்பு, இது மிக மோசமான திட்டம் என்பதையும் ஒப்புக்கொண்டிருந்தனர்.
அக்டோபர் 10ம் திகதி வெளியாகவிருக்கும் நினைவுக்குறிப்பில், கோவிட் பாதிப்பால் உயிருக்கு போராடியதையும், ஊரடங்கின் போது நடந்த கொண்டாட்டத்தால் தமது பதவி பறிபோனதையும் அவர் விரிவாக அலசியுள்ளார்.
தவறு நடந்தது உண்மை
மேலும், அவசர சிகிச்சை பிரிவில் படுத்திருக்கும் போது தூங்காமல் இருக்க போராடியதையும், தூங்கிவிட்டால் இனி ஒருபோதும் கண்விழிக்க வாய்ப்பில்லை என அஞ்சியதாகவும் போரிஸ் ஜோன்ஸன் பதிவு செய்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றின் போது தமது நடவடிக்கையில் தவறு நடந்தது உண்மை என ஒப்புக்கொண்ட ஜோன்ஸன், மன்னிப்பு கேட்பதை விட தமது அலுவலக ஊழியர்களுக்காக பரிந்து பேசியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2021ல் பிரித்தானியாவின் முன்னெடுப்பான கோவிட் தடுப்பூசிகள் ஐரோப்பிய தலைவர்களால் பறிக்கப்பட்டு நெதர்லாந்தின் தெற்கு ஹாலந்து பகுதியில் உள்ள லைடன் நகரில் உள்ள கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.
இந்த தடுப்பூசிகளையே, பிரித்தானிய சிறப்பு படைகளின் உதவியுடன் கைப்பற்ற போரிஸ் ஜோன்ஸன் திட்டமிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |