போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகவேண்டும்: 10,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
போரிஸ் ஜான்சனை மீண்டும் பிரதமராக்கவேண்டும் என்று கோரும் மனு ஒன்று ஒன்லைனில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் 10,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
போரிஸ் ஜான்சனை மீண்டும் பிரதமராக்கவேண்டும் என்று கோரும் மனு ஒன்று ஒன்லைனில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மனுவில் 10,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரித்தானிய அரசில் தொடர்ந்து சொதப்பல்கள் நிகழ்ந்துவரும் நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையதளத்தில், கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் அடுத்த பொதுத்தேர்தலில் நடக்க இருக்கும் பெருங்குழப்பத்தைத் தீர்க்க போரிஸ் ஜான்சனால் மட்டுமே முடியும் என நம்புகிறோம் என குறிப்பிடும் மனு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த இணையதளத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.
மக்கள் ஜனநாயக முறையில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த போரிஸ் ஜான்சனுக்காகத்தான் நான் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினராகவே இணைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரை கட்சியினர் பதவியிலிருந்து நீக்கியதும், நானும் விலகிவிட்டேன் என்கிறார்.
மற்றொருவர், கன்சர்வேட்டிவ் கட்சியினர் போரிஸ் ஜான்சனை வெளியேற்றியது அரசியல் தற்கொலைக்கு சமம், அப்படி நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கவே கூடாது என்று கூறியுள்ளார்.
இன்னொருவரோ, போரிஸ் ஜான்சன்தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்றும், அவர் பிரதமராக இருந்திருந்தால் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது என்றும், இது போரிஸ் மீண்டும் வருவதற்கான நேரம் என்றும் கூறியுள்ளார்.