ரஷ்யாவின் 20 பில்லியன் பவுண்டுகள்... உக்ரைனுக்கு வழங்கும் துணிச்சலுண்டா? போரிஸ் ஜான்சன் கேள்வி
உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த ரஷ்ய நிதியைப் பயன்படுத்தாததற்காக போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை இரவு ஸ்டார்மர் அரசாங்கத்தைக் கண்டித்துள்ளார்.
விடுவிக்க வேண்டும்
பிரதமர் ஸ்டார்மர் 'சிறிதளவாவது துணிச்சலுடன் விளாடிமிர் புடினுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டனில் உள்ள ரஷ்யாவின் 20 பில்லியன் பவுண்டுகள் வரையிலான சொத்துக்களை ஒருதலைப்பட்சமாக முடக்கத்திலிருந்து பிரித்தானியா விடுவிக்க வேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து லண்டனில் முடக்கப்பட்டுள்ள இந்த நிதி, உக்ரைனுக்குக் கடன் வழங்குவதற்கான பிணையமாகப் பயன்படுத்தலாம் என்றார்.
முடக்கபப்ட்டுள்ள ரஷ்ய நிதியில் இருந்து உக்ரைனுக்கு கடனை வழங்குவது குறித்து பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறியதைத் தொடர்ந்து, ஜான்சன் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்த நிதியிலிருந்து உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோக்களை கடனாக வழங்க ஒப்புக்கொண்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் போன்றோரிடம் தலைமைப் பொறுப்பை விட்டுக்கொடுத்துவிட்டதாக பிரதமர் ஸ்டார்மரை ஜான்சன் குற்றம் சாட்டினார்.
மேலும், பிரதமருக்கு எனது செய்தி இதுதான்: சிறிது துணிச்சலைக் காட்டுங்கள், தலைமைத்துவத்தைக் காட்டுங்கள். உக்ரைன் விவகாரத்தில் நாம் ஏன் தலைமைப் பொறுப்பைக் கைவிட்டுவிட்டோம்? உக்ரைன் முன்பு பிரித்தானியாவையே நம்பியிருந்தது.
தன்னிச்சையாக
இது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் எதையும் ஏன் கேட்கவில்லை? லண்டன் ஐரோப்பாவின் நிதித் தலைநகரம் இல்லையா என்றும் ஜான்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டுமின்றி, பிரித்தானியாவில் சுமார் 20 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன, மேலும் பிரான்சில் இதைவிட சற்றே குறைவான தொகை முடக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவும் பிரான்சும் தன்னிச்சையாகச் செயல்பட்டிருக்கலாம். இது உக்ரைனின் பாதுகாப்பிற்கு நிதியளிப்பதற்கு மட்டுமல்லாமல், புடினுக்கு ஒரு திட்டவட்டமான செய்தியை அனுப்புவதற்கும் கிடைத்த ஒரு பயங்கரமான தவறவிடப்பட்ட வாய்ப்பாகும் என்றார்.
அத்துடன், ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களைத் தடுத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் ஜான்சன் கண்டித்தார்.
ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்ததே இந்த முயற்சி தோல்வியடைந்ததற்கு ஒரு பகுதிக் காரணமாகும். அமெரிக்க அழுத்தம் காரணமாக இத்தாலி இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |