அடுத்த மாதம் முதல் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை அறிவிக்கவுள்ள போரிஸ் ஜான்சன்!
பிரித்தானியாவில் வரும் மே மாதம் முதல் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி பாஸ்போர்ட்டு திட்டம் குறித்த விதிமுறைகளை ஈஸ்டர் திங்கட்கிழமையன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பார் என கூறப்படுகிறது.
முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள பப்கள், உணவகங்கள், தியேட்டர்கள் மற்றும் அரங்கங்களில் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை பயன்படுத்தி பைலட் சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட இடங்களுக்கு ஒருவர் அனுமதிக்கப்பட, அவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதற்கான சான்றை, அதாவது தடுப்பூசி பாஸ்போர்ட்டை காண்பிக்கவேண்டும் என கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து பல இடங்களில் பைலட் சோதனையை நடத்த அரசு திட்டமிட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், வரும் ஜூன் 21-ஆம் திகதி ஊரடங்கு விதிகளை தளர்த்துவது என்பது இந்த தடுப்பூசி பாஸ்போர்ட்டின் பைலட் சோதனையை சார்ந்தே செயல்படுத்தப்படும் கூறப்படுகிறது.
