காற்றில் தலைகீழாக திரும்பிய போரிஸ் ஜான்சனின் குடை! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஒரு பொது நிகழ்வில் பிரித்தானிய இளவரசர் சார்லசுடன் அமர்ந்திருக்கும் போது, பிரதமர் போரிஸ் ஜான்சனின் குடை காற்றில் தலைகீழாக திரும்பிய வேடிக்கையான காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கடமையில் உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டார்.
அங்கு அவர், இளவரசர் சார்லஸின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு பலத்த காற்று அடித்துக் கொண்டிருக்க, பிரதமர் போரிஸ் ஜான்சனின் குடை தலைகீழாக மேல் நோக்கி மடிந்தது.
பின்னர் அவர் குடையை சரிசெய்தார், இதனை பார்த்த இளவரசர் சார்லஸ் மற்றும் மற்றவர்கள் புன்னகைத்தனர்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
....up, up and nearly away ☂️
— Sky News (@SkyNews) July 28, 2021
PM Boris Johnson struggles with his umbrella whilst seated next to Prince Charles at a memorial recognising the sacrifice of police officers who have died on duty.
Read more here: https://t.co/ia9HUvj5LD pic.twitter.com/dCcMiVcwyn