Universal Credit... பிரித்தானிய பிரதமரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு: கதறும் தாய்மார்கள்
பிரித்தானியாவில் Universal Credit திட்டம் ரத்து செய்யும் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் முடிவால் நொடிக்கு ஒரு குழந்தை பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரசு Universal Credit ரத்து செய்யும் முடிவில் இருந்து பின்வாங்க மறுத்த நிலையில் பிரித்தானியா முழுவதும் இது குழந்தைகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
ஆனால் கொரோனா காலத்தில் வாரத்திற்கு 20 பவுண்டுகள் என்ற Universal Credit திட்டம் ரத்து செய்துள்ள தமது முடிவு சரியானதே என பிரதமர் போரிஸ் ஜோன்சன் வாதிட்டுள்ளார்.
போரிஸ் ஜோன்சனின் இந்த அதிரடி முடிவால் 1.9 மில்லியன் குடும்பங்களில் உள்ள 3.5 மில்லியன் சிறார்கள் பாதிப்புக்கு உள்ளாவது உறுதி என கண்டறியப்பட்டுள்ளது.
அக்டோபர் 13 தொடங்கி நவம்பர் 12ம் திகதிக்குள் குறித்த திட்டமானது அமுலுக்கு வரும் என்பதால் நொடிக்கு ஒரு குழந்தை பாதிப்புக்கு இலக்காக வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
பாதிப்புக்கு இலக்காகும் சிறார்களின் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்வோர்கள். மேலும், போரிஸ் ஜோன்சனின் இந்த முடிவால் சிறார்களுக்கான உணவு மற்றும் உடை உள்ளிட்டவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர் காலம் ஏற்கனவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், எரிவாயு, மின் கட்டணமும் அதிகரித்துள்ளது, தற்போது குழந்தைகளை கடும் குளிரில் இருந்து தனியாக காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தாயார் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Universal Credit திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நமது பிள்ளைகள் நாம் ஏழைகள் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த இள வயதில் அவர்களை பணம் தொடர்பில் கவலை கொள்ள வைப்பது மிகக் கொடுமையானது என்கிறார் ஒரு தாயார்.