பேசாமல் உட்காருங்க! பிரிட்டன் பிரதமரிடம் அதிரடி காட்டிய அவைத்தலைவர்.. வைரலாகும் வீடியோ
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்.பி.க்களின் முறைகேடு குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையாளும் விதத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் நடந்த ஆளுங்கட்சி எம்.பி.க்களின் முறைகேடு தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அதில் பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவர், ஆளுங்கட்சி எம்.பி.க்களின் முறைகேடு குற்றச்சாட்டுகளை குறித்து பேசப்பட்டது.
அப்போது போரிஸ் ஜான்சன் குறுக்கிட்டு எதிர்க்கட்சி தலைவரிடம் கேள்விகளை எழுப்ப முயன்றார். அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற அவைத் தலைவர் பேசாமல் உட்காருங்கள்.. நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக இருக்கலாம்.
'Prime Minister sit down!' Speaker Sir Lindsay Hoyle clashes with Boris Johnson during PMQs - you don't see that very often pic.twitter.com/4SlQ0UJrZ4
— BenHurst (@BenHurst) November 17, 2021
ஆனால் இந்த அவையில் நான் தான் பொறுப்பில் இருக்கிறேன் என அதிரடியாக தெரிவித்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
அதேபோல் இந்த வீடியோவை பகிரும் இந்திய இணையவாசிகள் நம் நாட்டில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறுமா என ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.