இன்று பிரித்தானிய பிரதமர் தலைமையில் கேபினட் கூட்டம்: புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் இன்று கேபினட் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதிதாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் கேபினட் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.
ஆனால், Omicron வைரஸுக்கு எதிராக பிளான் B வேலை செய்வதால், இனி புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டிய அவசியம் இல்லை என தடுப்பூசிகள் துறை அமைச்சரான Maggie Throup தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து Omicron வைரஸ் வேகமாக பரவிவந்தாலும், எதிர்பார்த்ததுபோல, மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாகாது என்ற நம்பிக்கை அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், Omicron முந்தைய மரபணு மாற்ற வைரஸ்களைவிட மிதமாகவே உள்ளது என்று கூறியுள்ளார். ஆய்வுகளும், Omicron வைரஸ், முந்தைய வைரஸ்களைவிட 70 சதவிகிதம் வரை தீவிரம் குறைந்தது என்றே கூறுகின்றன.
மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் மோசமாக நோய்வாய்ப்படாமல் காப்பாற்றும் ஒரு சூழல் காணப்படும் நிலையில், பிரதமர் கூட்டத்திற்குப் பின் புதிதாக கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.