நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் போரிஸ் ஜான்சன்: அடுத்து என்ன நடக்கும்?
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, நேற்று இரவு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார் போரிஸ் ஜான்சன்.
அவருக்கு ஆதரவாக 349 வாக்குகளும், எதிராக 238 வாக்குகளும் கிடைத்ததையடுத்து, 111 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் போரிஸ் ஜான்சன்.
இதனால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழலாம். அதாவது, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும், போரிஸ் பதவி விலகித்தான் ஆகவேண்டும். ஒரே நல்ல விடயம், எதிர்க்கட்சிகள் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தும்படி கட்டாயப்படுத்தமுடியாது. மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 12 மாதங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முடியாது.
இதற்கிடையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் மீண்டும் ரிஷி சுனக்கே முன்னிலை வகிக்கிறார். அவருக்கு 115 வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்தபடியாக பென்னி மோர்டாண்டுக்கு 82 வாக்குகளும், லிஸ் ட்ரஸ்ஸுக்கு 71 வாக்குகளும் கிடைத்துள்ளன. டாம் டுகெந்தாட் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதால் இப்போது பிரதமருக்கான போட்டியில் நான்கு பேர் மட்டுமே நீடிக்கிறார்கள்.
AFP PHOTO / Jessica Taylor /UK Parliament