ஹரி-மேகன் இரண்டாவது குழந்தை பிறந்த செய்தி அறிந்தவுடன் முதல் ஆளாக வாழ்த்திய பிரபலம்! யார் அவர் தெரியுமா?
ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்த செய்தி அறிந்தவுடன், பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரித்தானியா அரச குடும்பத்தை விட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் ஹரி-மேகன் தம்பதிக்கு கடந்த 4-ஆம் திகதி அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தைக்கு, ஹரி-மேகன் தம்பதி Lilibet Diana என்று பெயர் வைத்துள்ளனர். இதில் Lilibet என்பது, பிரித்தானியா மகாராணியாரான இரண்டாம் எலிசபத்தின் புனைப் பெயர் எனவும், Diana என்பது ஹரியின் தாயாரான டயானாவை கவுரவிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹரி-மேகன் தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த செய்தியை அறிந்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் முதல் ஆளாக தன்னுடைய வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஹரி-மேகன் தம்பதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.