போருக்கு மத்தியில் உக்ரைன் தலைநகருக்கு பயணிக்க போரிஸ் திட்டம்! கசிந்த தகவல்
போருக்கு மத்தியில் உக்ரைன் தலைநகருக்கு பயணம் மேற்கொள்ள பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக DailyMail தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது 26வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதற்கு மத்தியில், ரஷ்யாவுக்கு எதிரான மோதலில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், கீவ் நகருக்கு பயணித்து ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக DailyMail தெரிவித்துள்ளது.
கீவ் நகருக்கான பயணம் குறித்து விரிவாக ஆய்வு செய்யுமாறு பிரதமர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
கீவ் நகரில் நிலைமை மோசமாக உள்ள நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் குறித்து, பாதுகாப்பு அதிகாரிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்களாம்.
அதேசமயம், கீவ் நகருக்கான போரிஸ் ஜான்சன் பயணத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என பிரித்தானியா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக DailyMail குறிப்பிட்டுள்ளது.