யூரோ கால்பந்து! இங்கிலாந்து-உக்ரைன் போட்டிக்கு முன் பிரித்தானியா பிரதமர் போரிஸ் வெளியிட்ட வீடியோ: கடும் கோபத்தில் ரசிகர்கள்
யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டம் இன்று துவங்குவதற்கு முன் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிட்ட வீடியோ ஸ்காட் மக்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் பங்குபெறும் யூரோ கால்பந்து தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று, நாக் அவுட் சுற்று முடிந்து, இப்போது காலிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.
அதன் படி இன்றைய காலிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து-உக்ரைன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி உக்ரைனில் இருக்கும் ரோமில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆட்டம் துவங்கிய நான்காவது நிமிடத்திலே, இங்கிலாந்து அணியின் கேப்டன் Harry Kane கோல் அடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து பாதி ஆட்டம் முடிந்த போதும், உக்ரைன் அணியால் கோல் அடிக்க முடியவில்லை,
Sterling >>>> Kane ⚽
— Match of the Day (@BBCMOTD) July 3, 2021
What a ball! What a start for England!
Watch and listen to #UKRENG on the BBC https://t.co/SgXUFtqSx6 #Euro2020 #bbceuro2020 pic.twitter.com/IFtfHIAFbw
இதனால் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இப்போட்டி துவங்குவதற்கு முன்பு, பிரித்தானியா பிரதமர் போரிஸ்ஜோன்சன் தன்னுடைய பிரதமர் அலுவலத்தின் தெருவில், ஒரு பெரிய இங்கிலாந்து கொடியுடன் போஸ் கொடுத்தது, வடக்கே இருக்கும் ஸ்காட்லாந்து மக்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
போரிஸ், தங்களுக்கு எந்த ஒரு ஆதரவையும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த காலிறுதிப் போட்டி துவங்குவதற்கு முன்பு, போரிஸ் ஒரு மிகப் பெரிய இங்கிலாந்து கொடியுடன் வெற்றி பெறுவதற்கான இரட்டை கட்டைவிரலை காண்பித்தார்.
இதனால், பிரதமர் இங்கிலாந்து தேசிய அணிக்கு ஆதரவு அளிப்பதில் மிகுந்த ஆர்வம் மற்றும் குரல் கொடுத்து வருகிறார். அவர்கள் தொடர்பான போட்டியை நெருக்கமாக பின்பற்றி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏனெனில், ஜேர்மனி அணிக்கெதிரான நாக் அவுட் சுற்றின் போது, போட்டி நடந்து கொண்டிருந்த போது போரிஸ் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து போட்டி பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
இதே போரிஸ் லீக் சுற்று போட்டியின் போது ஏன் வேல்ஸ் அணிக்கு ஏன் இதே உற்சாகத்தை காட்டவில்லை என்று சுட்டிக் காட்டி வருகின்றனர்.