பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் மாற்றம்., போரிஸ் ஜான்சன் அதிரடி!
பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் பதவிநீக்கம் செய்யப்பட்டு, எலிசபெத் ட்ரஸ் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நேரத்தில், அப்போது பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் விடுமுறையில் சென்றிருந்தார்.
இதன்காரணமாக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன மற்றும் அவரது பதவியை ராஜினாமா செய்ய கோரி எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த நிலையில், புதைக்கிழமை மாலை பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அமைச்சரவையில் சில அதிரடி மாற்றங்களை செய்தார்.
பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் (Dominic Raab) தற்போது அந்த பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக எலிசபெத் ட்ரஸ் (Elizabeth Truss) வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எலிசபெத் ட்ரஸ் மேலும் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
40 வயதான ட்ரஸ் இதற்கு முன் சர்வதேச வர்த்தக செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டொமினிக் ராப் தற்போது, நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனால், அவர் தொடர்ந்து துணைப் பிரதமர் பதவியை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.