பிரித்தானியாவில் இந்தியர்களுக்கு அதிகமான விசா அனுமதி: இந்திய பயணத்தில் போரிஸ் சமிக்கை!
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் எந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஈடாக அதிகமான விசா அனுமதியை பிரித்தானியா தர தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்படும் போது விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவுடனே வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுவுவதற்காக பிரித்தானியாவில் இந்தியர்களுக்கான இடமளிக்கும்(விசா) வசதியை அதிகரிக்க தயாராக இருப்பதாக சமிக்கை செய்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்தித்த போது பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், திறமையானவர்களை எப்போதும் இந்த நாட்டிற்கு வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
photo: Ben Stansall/Pool via REUTERS
ஐரோப்பிய யூனியனின் பொதுவான வர்த்தக கொள்கையில் இருந்து வெளியேறி, உலகில் வளர்ந்து வரும் இந்தோ-பசிபிக் பொருளாதார நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அவற்றில் பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய அமைச்சர்களாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொள்வதை பிரித்தானியா தனது முன்னுரிமைகளில் ஓன்றாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியர்கள் பிரித்தானியாவில் குடியேறுவது மற்றும் வேலைவாய்ப்பிற்கான சிறந்த வாய்ப்புகளை எதிர்பார்த்து இருப்பதாகவும், இந்தியா பிரித்தானிய இடையே மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தமானது பிரித்தானியாவில் கல்வி பயிலும் மாணவர்களின் முதல் தொழில் வல்லுநர்கள் வரை செலுத்தும் கட்டண தொகைகளில் தளர்வை கொண்டு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
photo: Ben Stansall/Pool via REUTERS
இந்தியாவின் பசுமை தொழில்நுட்பத்திற்கு பிரித்தானியாவை வாடிக்கையாளராக மாற்றுவது தொடர்பாக இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது மற்றும் இந்த ஒப்பந்தங்கள் மூலம் பிரித்தானியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கையும் என இரட்டிப்பாகும்.
இதன் மூலம் இந்தியாவுடனே இந்த வர்த்தக ஒப்பந்தம் வரும் 2035ம் ஆண்டுக்குள் 28 பில்லியன் பவுண்டுகள் வரை அதிகரிக்கும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.