பிரித்தானியாவில் நீடிக்கும் ஊரடங்கு... உறுதி செய்த அரசு வட்டாரம்! எத்தனை நாட்கள் தெரியுமா?

Curfew CoronaVirus UnitedKingdom BorisJohnson
By Kaviarasan Jun 11, 2021 05:57 PM GMT
Report

பிரித்தானியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வரும் 21-ஆம் திகதியோடு ஊரடங்கு முடிவுக்கு வரவில்லை என்பதை அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிரித்தானியா அரசு, தடுப்பூசி திட்டத்தை மிகவும் வேகமாக அமுல்படுத்தியது. அதே போன்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனால் பிரித்தானியாவில், புதிதாக கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு போன்றவை குறைந்து கொண்டே வந்தது. இதன் அடிப்படையில் போரிஸ் தலைமையிலான அரசு, இதே போன்ற நிலை நீடித்தால், கொரோனா பரவல் குறைந்தால், வரும் 21-ஆம் திகதியோடு ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்திருந்தது.

ஆனால், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், அதாவது டெல்டா என்றழைக்கப்படும் அந்த கொரோனா வைரஸ் இப்போது பிரித்தானியாவின் பல பகுதிகளில் தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது.

இதனால், சமீபநாட்களாக, கொரோனாவால் பாதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஐந்தாயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில், அதை அரச வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.

பிரித்தானியாவில் நீடிக்கும் ஊரடங்கு... உறுதி செய்த அரசு வட்டாரம்! எத்தனை நாட்கள் தெரியுமா? | Boris To Delay June 21 Reopening Uk Curfew

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், கடந்த ஒரு வாரத்தில் டெல்டா வைரஸ் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிடுவதற்கு வாய்ப்பே இல்லை.

வரும் திங்கட் கிழமைக்குள் இந்த புதிய தொற்று பரவல் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும். அதில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், வரும் ஜுலை 5-ஆம் திகதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அப்படி பரவல் குறைவாக இருந்தாலும், நிச்சயமாக அடுத்த இரண்டு வாரத்திற்கு ஊரடங்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர் ஏனெனில், இந்த டெல்டா கொரோனா வைரஸ், தீவிரமாக பரவும் தன்மை கொண்டுள்ளது.

இது வீட்டிற்குள்ளே 60 சதவீதம் பரவும் ஆபத்தை கொண்டது. இதன் காரணகாமவே, சமீப நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவான வேகத்தில் அதிகரித்து வருகிறது.

எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் முக்கியம், முதல் தடுப்பூசி சில பாதுகாப்பையே அளிக்கும். அதுவே இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டால், அது நம்மை பாதுகாக்கும் என்று அரசு வலியுறுத்துகிறது.

மேலும், வரும் 21-ஆம் திகதி ஊரடங்கு தளர்வு குறித்து இன்னும் எந்த ஒரு இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெளிவாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது, 

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US