குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பும் போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் குழந்தையை பெற்று 9 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் பணியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வில்ஃப்ரெட் எனும் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.
இந்நிலையில், குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆனதையடுத்து, கேரி சைமண்ட்ஸ் ஒரு உயர் பதவியில் பணியாற்றிவந்த ஒரு பிரபலமான விலங்கு தொண்டு நிறுவனமான Aspinall Foundation, அவரை மீண்டும் பணிக்கு அழைத்தது.
அதனைத் தொடர்ந்த அவர் மீண்டும் பணிக்கு செல்ல நிறுவனத்தின் அழைப்பை ஏற்றுள்ளார்.
விலங்குகள் நல ஆர்வலருமான கேரி சைமண்ட்ஸ் வனவிலங்கு தொண்டு நிறுவனத்தின் தகவல் தொடர்புத் தலைவராக தனது பணியை தொடரவுள்ளார்.
கேரி சைமண்ட்ஸ் 2020-ஆம் ஆண்டில் PETA அமைப்பினால் பிரித்தானியாவின் "Person of the Year" என்ற பெயரைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Aspinall Foundation தொண்டு நிறுவனத்தை ஜான் ஆஸ்பினால் எனும் மிருகக்காட்சிசாலையின் உரிமையாளரால் 1984-ல் அமைக்கப்பட்டது.
இந்த தொண்டு நிறுவனம் தற்போது காங்கோ, காபோன், ஜாவா மற்றும் மடகாஸ்கர், இந்தியா மற்றும் கம்போடியாவில் திட்டங்களைக் கொண்டுள்ளது.
