கடும் பட்டினி நிலையில் இருந்து... ரூ.166,240 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த Jaynti Kanani என்பவரே கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு, தற்போது 20 பில்லியன் டொலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்.
இக்கட்டான நிலையிலும்
அகமதாபாத் நகரில் வைர தொழிற்சாலை தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ள Jaynti Kanani-ன் தந்தை, கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்துள்ளார், இந்த இக்கட்டான நிலையிலும் படிப்பில் கெட்டிக்காரரான Jaynti Kanani பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கண்ணியமான வேலையைத் தேடுவதே அவரது நோக்கமாக இருந்தது.
மட்டுமின்றி, அவரது நோய்வாய்ப்பட்ட தந்தை தனது கண்பார்வை மற்றும் வேலை செய்யும் திறனை இழந்ததால், நல்ல சம்பளத்தில் வேலை என்ற தேடலுக்கு அவரை இட்டுச் சென்றது.
சந்தை மதிப்பு ரூ. 166,240 கோடி
மேலும், ஒருமுறை புனேவில் வெறும் 6,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை பார்த்துள்ளார் Jaynti Kanani. 2017ல் சந்தீப் நெயில்வால் மற்றும் அனுராக் அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து Polygon என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார் Jaynti Kanani.
பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சியின் முக்கியமனவர்களில் ஒருவராக ஆன பிறகு, பாலிகான் 2022ல் 450 மில்லியன் டொலர் முதலீட்டைப் பெற்றது.
தற்போது பாலிகான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ. 166,240 கோடி என்றே கூறப்படுகிறது.
தமது கடின உழைப்பால் உருவாக்கிய நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக Jaynti Kanani சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |