லண்டனை அடுத்து ஜேர்மனிக்கு கடும் மிரட்டல் விடுக்கும் தென் ஆப்பிரிக்க நாடொன்று

Elephant South Africa
By Arbin Apr 02, 2024 10:09 PM GMT
Report

அரசியல் மோதல் காரணமாக 20,000 யானைகளை ஜேர்மனிக்கு அனுப்பப்போவதாக போட்ஸ்வானா ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார்.

கடுமையான வரம்புகள்

பெருமைக்காக காட்டு விலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கைகளுக்கு கடுமையான வரம்புகள் இருக்க வேண்டும் என்று ஜேர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பரிந்துரைத்தது.

லண்டனை அடுத்து ஜேர்மனிக்கு கடும் மிரட்டல் விடுக்கும் தென் ஆப்பிரிக்க நாடொன்று | Botswana Threatened 20000 Elephants

ஆனால் இந்த நடவடிக்கையானது போட்ஸ்வானா மக்களை வறுமையில் தள்ளும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி Mokgweetsi Masisi வாதிட்டிருந்தார்.

மேலும், வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளின் விளைவாக யானைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், வேட்டையாடுவதால் மட்டுமே, அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார்.

இந்த விலங்குகளுடன் ஜேர்மன் மக்கள் வாழ்ந்து பார்த்துவிட்டு, எங்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்றும் ஜனாதிபதி Mokgweetsi Masisi குறிப்பிட்டிருந்தார். உலகில் உள்ள யானைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானா நாட்டில் உள்ளது.

திவாலான குடும்ப தொழில்... தாயாரிடம் கடன் வாங்கிய ரூ 50,000: இன்று பல கோடிகள் மதிப்பிலான நிறுவனம்

திவாலான குடும்ப தொழில்... தாயாரிடம் கடன் வாங்கிய ரூ 50,000: இன்று பல கோடிகள் மதிப்பிலான நிறுவனம்

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், 130,000 யானைகள் போட்ஸ்வானா நாட்டில் வாழ்கிறது. மேலும், யானைகளால் சொத்துக்களுக்கு சேதம், விளை நிலங்கள் பாதிக்கப்படவும் காரணமாக உள்ளது.

இதனால் அங்கோலா போன்ற நாடுகளுக்கு சுமார் 8,000 யானைகளை போட்ஸ்வானா அன்பளிப்பாக அளித்துள்ளது. அது போன்று, ஜேர்மனிக்கும் யானைகளை அன்பளிப்பாக அளிக்க தாங்கள் தயார் என்றும் இது வெறும் வேடிக்கை அல்ல என்றும் Mokgweetsi Masisi தெரிவித்துள்ளார்.

தடை கோரும் பிரேரணை

உண்மையில் பெருமைக்காக யானைகளை வேட்டையாடுவதை 2014ல் போட்ஸ்வானா நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால் உள்ளூர் மக்களின் கட்டாயத்தை கருத்தில் கொண்டு 2019ல் தடையை நீக்கியது.

லண்டனை அடுத்து ஜேர்மனிக்கு கடும் மிரட்டல் விடுக்கும் தென் ஆப்பிரிக்க நாடொன்று | Botswana Threatened 20000 Elephants

மேலும் ஒவ்வொரு ஆண்டும் யானைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் வேட்டைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. யானை தந்தங்களை இறக்குமதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு ஜேர்மனி என்றே கூறப்படுகிறது.

ஆனால் யானை தந்தங்களின் வர்த்தகத்தை அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளது. மார்ச் மாதம் பிரித்தானியாவிலும் பெருமைக்காக யானை வேட்டையில் ஈடுபடுவதை தடை கோரும் பிரேரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த முன்னெடுப்புக்கும் போட்ஸ்வானா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், லண்டனில் யானைகளை களமிறக்க இருப்பதாக மிரட்டலும் விடுக்கப்பட்டது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US