சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் சுரைக்காய் சட்னி: எப்படி செய்வது?
பொதுவாக அனைவரின் வீட்டிலும் காலையிலும் மாலையிலும் விரும்பி சாப்பிடும் டிபன் இட்லி தோசை தான்.
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள எப்போதும் போல சாம்பார் சட்னி செய்யாமல் சுரைக்காய் சட்னி செய்து சாப்பிடுங்கள்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சுரைக்காய் சட்னி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- சுரைக்காய் - 1
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி - 2 துண்டு
- பூண்டு - 6 பல்
- கொத்தமல்லி- சிறிதளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
- சீரகம்- ½ ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 4
- தயிர் - 1 டம்ளர்
- காய்ந்த மிளகாய்- 1
செய்முறை
முதலில் சுரைக்காய்யை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய சுரைக்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நன்றாக வதக்கியதை இதனை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பின் அதில் தயிர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால் சுரைக்காய் சட்னி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |