வெயிலில் கருப்பான முகம் உடனடி பொலிவு பெற இந்த ஒரு Facepack போதும்
இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்ற இந்த ஒரு Facepack போதும்.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், வெயிலில் கருப்பான முகத்திற்கு உடனடி பொலிவு தரும் சுரைக்காய் Facepack பற்றி பார்க்கலாம்.
1. சுரைக்காய் + முல்தானி மிட்டி
தேவையான பொருட்கள்
- சுரைக்காய்- 1 துண்டு
- முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் சுரைக்காயை நன்கு அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
பின் இந்த சுரைக்காய் சாற்றில் முல்தானி மெட்டியை கலந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவவும்.
முகத்தில் போட்ட பேஸ்ட் காய்ந்த பிறகு சருமத்தைக் கழுவ வேண்டும்.
இந்த செயல் முறையை தொடர்ந்து வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்திவரலாம்.
இந்த சுரைக்காய் முல்தானி மெட்டி Facepack முகத்திற்கு உடனடியான பொலிவை தருகிறது.
2. சுரைக்காய் + வெள்ளரி
தேவையான பொருட்கள்
- சுரைக்காய்- 1 துண்டு
- வெள்ளரி- 2 துண்டு
பயன்படுத்தும் முறை
முதலில் சுரைக்காய் மற்றும் வெள்ளரி இரண்டையும் அரைத்து துணி மற்றும் வடிக்கட்டி உதவியுடன் அதை வடிகட்டவும்.
பின் சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் தண்ணீரை சருமத்தில் தடவவும்.
இதனை சருமத்தில் 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு முகத்தை நன்கு கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் சருமம் அழகாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |