ஊளைச்சதையை குறைக்கணுமா? வாரத்தில் இரண்டு நாள் இந்த சூப் குடிங்க போதும்!
பொதுவாக நம் சமையலறையில் இருக்கும் ஒரு காய் தான் சுரைக்காய். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. சுரைக்காயில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால் இது எடை இழப்புக்கு மிகவும் சிறந்தது.
இதில் 92 சதவீதம் நீரச்சத்துடன்,வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமானத்திற்கும், இதயத்திற்குஅஜீரணம், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை, புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
குறிப்பாக ஊளைச்சதை எடை இழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு சுரைக்காயில் சூப் செய்து குடிப்பது நல்லது. அந்தவகையில் தற்போது இதனை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- துண்டுகளாக நறுக்கிய சுரைக்காய் - ஒன்றரை கப்
- தக்காளி - 2
- வெங்காயம் - 2
- குடைமிளகாய் - 1
- ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
தயாரிப்பது எப்படி?
- சுரைக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் குடமிளகாய் ஆகியவற்றை பிரஷர் குக்கரில் போட்டு இரண்டு விசில் வைக்கவும்.
- பிரஷர் நீங்கியவுடன் வேகவைத்த காய்கறிகளை மிக்ஸியில் சேர்த்து கிரீமியாக பேஸ்ட் போல் மசித்துக் கொள்ளுங்கள்.
-
பின் ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்யை சேர்த்து சூடாக்கி, அதில் சீரகத்தை சேர்க்கவும். அதனுடன் வெண்ணெய் இருந்தால் 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
-
பின்னர் அரைத்து வைத்த பேஸ்ட்டை கடாயில் சேர்த்து நன்கு கலக்கி, அதனை இரண்டு நிமிடங்கள் அப்படியே விடவும். பின் அதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்தால் சுரைக்காய் சூப் ரெடி .