சுவிட்சர்லாந்துக்கு வெளிநாட்டவர் கொண்டுவந்த பால் போத்தல்கள்: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த வாகனம் ஒன்றை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள், அந்த வாகனத்தில் ஏராளமான போத்தல்களில், பால், ஷாம்பூ மற்றும் தண்ணீர் இருப்பதைக் கண்டுள்ளார்கள். ஆனால், உண்மையில் அந்த போத்தல்களில் என்ன இருந்தது தெரியுமா?
வாகன சோதனையில் சிக்கிய நபர்
கடந்த மாதம், அதாவது, மே மாதம் 21ஆம் திகதி, சுவிஸ் எல்லையில் சுங்க அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது, வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டார்கள்.
அப்போது, அந்த வாகனத்தில் ஏராளமான போத்தல்களில், பால், ஷாம்பூ மற்றும் தண்ணீர் இருப்பதைக் கண்ட அதிகாரிகள், தற்செயலாக அவற்றில் சில போத்தல்களைத் திறந்துபார்த்தார்கள்.
அப்போது அந்த பாட்டிகளில் இருந்தது, பாலோ தண்ணீரோ ஷாம்பூவோ அல்ல என்பது தெரியவந்தது. அந்த போத்தல்களில் இருந்தது சுத்தமான ஆல்கஹால் என அழைக்கப்படும் எத்தனால்.
உடனடியாக, இத்தாலி நாட்டவரான அந்த நபருக்கு பெரும் தொகை ஒன்று அபராதமாக விதிக்கப்பட, அவர் அந்த இடத்திலேயே அந்த அபராதத்தை செலுத்தினார். ஆனால், அவர் அந்த ஆல்கஹாலை சுவிட்சர்ட்லாந்துக்குள் கொண்டுவரவேண்டுமானால், அதற்காக அவர் இன்னொரு பெருந்தொகையை சுங்க வரியாக செலுத்தவேண்டும். ஆகவே, அவர் தன் நாடான இத்தாலிக்கே தான் கொண்டுவந்த பொருட்களுடன் திரும்பிச் சென்றுவிட்டார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |